ரயில் நிலையத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; 4 பேர் கைது!

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 04:10 pm

sexual-harrasement-at-kumbakonam

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலையத்தை நள்ளிரவு அடைந்த ரயிலில் தனியாக வந்திறங்கிய இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கும்பகோணம் நீதிமன்றத்தில் ரகசிய வாக்கு மூலம் பெறப்பட்டது.

வட மாநிலத்தை சேர்ந்த, சுமார் 23 வயதுடைய இளம் பெண் கடந்த 2ம் தேதி இரவு சென்னையிலிருந்து  ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் கும்பகோணம் வந்துள்ளார். கும்பகோணம் ரயில் நிலையத்தில் சுமார் 12 மணியளவில் இறங்கிய அந்த பெண் தங்கும் விடுதிக்கு செல்வதற்காக அங்கிருந்த ஆட்டோவை அழைத்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை ஆட்டோவில் அழைத்துக் கொண்டும், செல்போனில் பேசிக்கொண்டும் சென்றதாகவும்,. அதே நேரத்தில் மோட்டார் சைக்கிளில் இருவர் பின்தொடர்ந்து வந்ததாகவும், இதனை தொடர்ந்து ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என நினைத்த அந்த பெண் ஆட்டோவிலிருந்து குதித்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இளம்பெண்னுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர். அவர்களின் பிடியிலிருந்து தப்பிய இளம்பெண்  கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் .இன்று காலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தினேஷ், வசந்த .புருசோத், அன்பரசன் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கும்பகோணம் நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிபதி ரகசிய வாக்குமூலம் இன்று பெற்றார். இந்த சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பாதிக்கப்பட்ட பெண் கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியில் அலுவலராக பயிற்சி பெற வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close