நெல்லை: சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து

  அனிதா   | Last Modified : 06 Dec, 2018 09:00 am

nellai-a-fire-broke-in-a-car-going-on-the-road

நெல்லை அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீபிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுநர் உடனடியாக காரை விட்டு இறங்கியதால் உயிர் தப்பினார். 

நெல்லை மாவட்டம் வீரகேரளம் புதூரில் உள்ள தொழில் பயிற்சி பள்ளியில் இணை பயிற்சி அலுவலராக பணியாற்றி வருபவர் மாரியப்பன். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புதிதாக கார் ஒன்று வாங்கியுள்ளார். இந்நிலையில், அவர் தென்காசியில் இருந்து சொந்த ஊரான தூத்துக்குடிக்கு காரில் சென்றுள்ளார். நெல்லை அருகே வந்த போது, காரில் புகை வருவதை கண்ட மாரியப்பன் உடனடியாக காரை நிறுத்திவிட்டு வெளியே இறங்கியுள்ளார். சில நிமிடங்களிலேயே தீ மளமளவென பரவி கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close