மதுரை: ரவுடி வரிச்சூர் செல்வம் உட்பட 3 பேர் மீது வழக்கப் பதிவு

  டேவிட்   | Last Modified : 06 Dec, 2018 05:52 pm
madurai-case-filed-against-rowdy-varichur-selvam-plus-2

பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் உட்பட 3 நபர்கள் மீது மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் பணம் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னையைச் சேர்ந்த மெர்லின் தாமஸ் என்பவர் மதுரையில் தனியார் ஏஜன்ஸி நடத்தி வருகிறார். இவர் மதுரையை சேர்ந்த முத்து கிருஷ்ணன் என்பவருக்கு ரூ 3 கோடி கடன் வழங்கியுள்ளார். முத்து கிருஷ்ணன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மெர்லின் தாமஸ் கடனாக கொடுத்த ரூ.3 கோடியை முத்து கிருஷ்ணன் குடும்பத்திடம் கேட்ட போது அவர் இறந்து விட்டார் பணம் தர முடியாது என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், பணத்தை திரும்ப வாங்கி தரக் கோரி மெர்லின் தாமஸ், ரவுடி வரிச்சூர் செல்வத்தை அணுகியுள்ளார்.  பணத்தை திரும்ப வாங்கி கொடுக்க ரூ.5 லட்சம் மற்றம் சொகுசு கார் ஒன்று வரிச்சூர் செல்வம் வாங்கி கொண்டு தற்போது வரை பணம் வாங்கி தராமல் மெர்லின் தாமஸை ஏமாற்றியுள்ளார். 

இது தொடர்பாக இன்று மெர்லின் தாமஸ் கொடுத்த புகாரின் பேரில் அண்ணா நகர் காவல் துறையினர் வரிச்சூர் செல்வம் உட்பட மூன்று நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close