முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை !

  டேவிட்   | Last Modified : 07 Dec, 2018 05:56 am
liver-transplantation-by-cm-medical-insurance

முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் முற்றிலும் இலவசமாக சிகிச்சை பெற முடியும் என கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திக் மதிவாணன் தெரிவித்துள்ளார். 

நெல்லையில், சென்னை அப்போலோ மருத்துவமனை  - நெல்லை ஷபா மருத்துவமனை இணைந்து கல்லீரல் சார்ந்த மருத்துவ ஆலோசனை மையம் துவக்கியது. நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திக் மதிவாணன்,  கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களை 95% சிகிச்சையின் மூலம் காப்பாற்றலாம் எனவம் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பழைய வாழ்க்கைக்கு திரும்பலாம் எனவும் குறிப்பிட்டார். 

மேலும், தனியார் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவு 25 முதல் 30 லட்சம் ரூபாய் செலவு ஆகும். ஆனால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மூற்றிலும் இலவசமாக செய்யப்படும் என தெரிவித்தார். 

கல்லீரல் 70 சதவீதம்  பாதிப்படையும் வரை தெரிவதில்லை. அதற்கு மேல் தான் மஞ்சள்காமாலை, ரத்த வாந்தி, காலில் நீர் கோர்ப்பது இது போன்ற சில பிரச்சனைகள் தெரிய வரும். இந்த அறிகுறிகள் தெரிந்தவுடன் மருத்துவரை அணுகி  ஆலேசனை, சிகிச்சை முறைகளை தெரிந்து கொள்ளலாம், என்றும் கார்த்திக் மதிவாணன் கூறினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close