அதிமுக பிரமுகரின் கார் தாக்கப்பட்ட விவகாரம்: 3 பேர் கைது!

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 10:44 am
aiadmk-car-attack-3-arrested

நாகையில் கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட்டபோது அதிமுக பிரமுகரின் கார் தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். 

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கஜா புயல் பாதிப்புகளை அமைச்சர் ஓ.எஸ். மணியன், அதிமுக நிர்வாகிகளுடன் கடந்த 18ம் தேதி பார்வையிட்டார். அப்போது, விழுந்தமாவடி கன்னித்தோப்புப் பகுதியில் அமைச்சருடன் சென்ற அதிமுக பிரமுகரின் கார் அடித்து நொறுக்கப்பட்டது. இதுதொடர்பாக கீழையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், விழுந்தமாவடி, வடக்கு மணல்மேடு பகுதியைச் சேர்ந்த மனோகரன் (53), கன்னித்தோப்புப் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (30), மணல்மேடு பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த கவியரசன் (30) ஆகியோர், அதிமுக பிரமுகரின் காரை அடித்து சேதப்படுத்தியது  தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close