விதிகளை மீறி இயங்கும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 12:06 pm
strict-action-will-be-taken-against-for-auto

சேலத்தில் விதிகளை மீறி அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

சேலம் நான்கு சாலை பகுதியில் இன்று காலை பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த பள்ளி மாணவிகள் 13 பேர் காயமடைந்தனர். அவர்களை பொதுமக்கள் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்டோவில் அதிக அளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்ததே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ரோகிணி,சேலம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் வாகன விபத்துகளை தடுக்க மாதந்தோறும் நடைபெறும் சாலை பாதுகாப்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் அளவுக்கு அதிகமான குழந்தைகளுடன் ஆட்டோக்களில் ஏற்ற அனுமதிக்கக் கூடாது எனவும் ஆட்சியர் ரோகினி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close