கஜா புயல் நிவாரணத்திற்காக கலைநிகழ்ச்சியுடன் நிதி திரட்டிய கலைஞர்கள்...!

  அனிதா   | Last Modified : 07 Dec, 2018 01:44 pm
artists-collect-the-funded-for-gaja-storm-relief

கும்பகோணத்தில், நாட்டுப்புற கலைஞர்கள் தங்கள் கலை நிகழ்ச்சிகளுடன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி திரட்டினர். 

தமிழகத்தை தாக்கிய கஜா புயலால், திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும், நிவாரணப் பொருட்கள் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், கும்பகோணத்தில், தமிழக நாட்டுப்புற இசைக்கலை பெருமன்றம் சார்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிதி திரட்டப்பட்டது. இதில் ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டு, மயிலாட்டம், ஒயிலாட்டம், குச்சிசண்டை, கரகாட்டம், தப்பட்டையுடன் கலைகளை வெளிப்படுத்தி, வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் நிதி திரட்டினர்.  

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close