21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்

  அனிதா   | Last Modified : 07 Dec, 2018 03:21 pm
village-administration-officers-hunger-strike-to-emphasize-21-point-demands

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், உட்பிரிவு பட்டா மாறுதல் உட்பட அனைத்து விதமான பட்டா மாறுதல்களிலும் விஏஓ பரிந்துரையை கட்டாயமாக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலரின் கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கணினி மற்றும் அடிப்படை இணையதள வசதிகள் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் இன்று ஒருநாள் விடுப்பு எடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, சங்க மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில், மண்டல செயலாளர் துரைசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் மாரியப்பன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர். 

இதேபோல், நெல்லையில் பாளை சித்தா கல்லூரி அருகில் உள்ள மைதானத்தில் சங்க மாவட்ட தலைவர் முத்துசெல்வன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட கிராம நிர்வாகிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிடில், வரும் 10ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப்போராட்டம் நடைபெறும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close