அரசு மருத்துவமனையிலும் லஞ்சம்! அதிகாரிகள் அதிரடி சோதனை!!

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Dec, 2018 07:15 pm

bribery-in-govt-hospital

சேலம் மாவட்டம், ஓமலூர் அரசு மருத்துவமனையில் இயங்கும் அனைத்து பிரிவுகளிலும் நோயாளிகளிடம் லஞ்சம் கேட்பதாக வந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி தாலுக்காவில் வசிக்கும் பொதுமக்கள் தினமும் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று சென்று வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள்  மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வரும்பொழுது உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளாமல் தரகர்களின் வழிகாட்டுதல் படியே சிகிச்சைக்கு சேர்க்கப்படுவார்கள் மேலும் பொதுமக்களிடம்  மருந்து மாத்திரைகள் வழங்குவதற்கும் பணம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தததையடுத்து இன்று சுமார் 12 மணியளவில் கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரமௌலி தலைமையில் ஆய்வாளர்கள் தங்கமணி, பூபதிராஜன் மற்றும் கோமதி ஆகியோர் மருத்துவமனையில் இரண்டு குழுக்களாக பிரிந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் இவர்களுடன் சேலம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்கள் வட்டாட்சியர் சாந்தி மற்றும் ராஜு உடன் இருந்தனர். லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் சோதனையால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது. அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் இந்த சோதனை மருத்துவர் மற்றும் சிலரிடையே பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.