திருச்சி: உயிரிழந்த ராணுவ படை வீரர்களை நினைவுக்கூறும் கொடிநாள்

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Dec, 2018 07:59 pm

flag-day-celebrated-at-trichy

முன்னாள் படை வீரர்கள் நலத்துறையின் சார்பில் கொடிநாள் தினத்தையொட்டி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்க்கு பரிசுப்பொருட்களை மாவட்ட ஆட்சியர் ராசாமணி வழங்கினார். 

பனிமுகடுகள் உள்ள இமயமலை எல்லைகளையும், அடர்ந்த காடுகள் நிறைந்த வடகிழக்கு எல்லைப் பகுதிகளையும், பரந்த சமவெளியான வடமேற்கு எல்லைப் பகுதிகளையும், நீண்ட நெடிய கடல் பகுதிகளையும் காவல் காத்து, தாய்த் திருநாட்டிற்காக தமது உயிரைத் தியாகம் செய்த முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் பேணிக் காத்திடுவது நமது சமூகக் கடமையாகும்.இந்த சமூகக் கடமையை நிறைவேற்றிடும் பொருட்டு கொடிநாள் அன்று கொடி விற்பனை மூலமும், நன்கொடைகள் மூலமும் திரட்டப்படும் நிதி, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், அண்டை நாட்டு எதிரிகள் மற்றும் உள்நாட்டு தீவிரவாதிகளின் தாக்குதலில் உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது.

முன்னாள் படை வீரர்கள் நலத்துறையின் சார்பில் கொடிநாள் தினத்தையொட்டி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்க்கு பரிசுப்பொருட்களை மாவட்ட ஆட்சியர் ராசாமணி வழங்கினார். அருகில் ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர், முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். இதேபோல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கொடி நாள் நிதியாக 19 ஆயிரம் ரூபாயை வழங்கினார். மேலும் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 25 ஆயிரம் ரூபாய் வழங்கினார். 

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.