ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதேசியையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் 

  டேவிட்   | Last Modified : 07 Dec, 2018 08:00 pm

tight-security-in-srirangam-due-to-vaigunda-ekathesi

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் தற்காலிக புற காவல் நிலையத்தை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜ் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வைகுண்ட ஏகாதசி திருவிழாவிழாவின் பகல் பத்து உற்சவும் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.பகல் பத்து மற்றும் ராப்பத்து உற்சவங்கள் நடக்கும் இருபது நாட்களுக்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீர்படுத்தும் பணிக்காக சுமார் 500 காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். டிசம்பர் 18 ஆம் தேதி அதிகாலை நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு அன்று நான்காயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பாதுகாப்புக்காக 102 கண்காணிப்பு கேமராக்கள் கோவிலின் உட்புறமும் 26 கேமராக்கள் கோவிலின் வெளிப்புறமும் அமைக்கப்பட்டு அவை தொடர்ந்து கண்காணிக்கப்படும்.பக்தர்கள் வசதிக்காக ஸ்ரீரங்கம் பகுதியில் 10 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது,அதே போல 21 எல்.இ.டி டி.விக்கள் அமைக்கப்பட்டு கோவிலின் வைகுண்ட ஏகாதசி நிகழ்வுகள் அனைத்தும் திரையிடப்படும் என்றார். இந்நிகழ்வில் காவல் துறை துணை ஆணையர்கள்,உதவி ஆணையர்கள்,காவல் துறை அதிகாரிகள், கோவில் இணை ஆணையர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். நாளை தொடங்கப்பட உள்ள பகல் பத்து உற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையிலான கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.