நெல்லையில் ”திடீர் ” பேருந்து நிலையங்கள்...!

  டேவிட்   | Last Modified : 08 Dec, 2018 12:04 am
new-bus-stands-in-tirunelveli

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளதால் அடுத்த 18 மாதங்களுக்கு நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையம் மூடப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இந்த பேருந்து நிலையைத்திற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர்  வெளியிட்டுள்ளார்.

1. டவுண் நயினார்குளம்: பேட்டை, சுத்தமல்லி, சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள்
2. டவுன் சந்தி பிள்ளையார் முக்கு: பாளை மற்றும் மானூர் பேருந்துகள்
3. அருணகிரி தியேட்டர்: சங்கர் நகர், தென்கலம், கங்கைகொண்டான்
4. பாளை பஸ் நிலையம்: என்ஜிஓ காலனி, நாங்குநேரி
5. பாளை நேரூஜி கலையரங்கம்: கே.டி.சி நகர், சாந்தி நகர் 

ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  எப்போதும் பரபரப்பாய் காணப்படும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை ஆண்டுக்கு களையிழந்து கிடக்கப் போகிறது என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிப்பதுடன், விரையில் பணிகள் முடிவடைய விரும்புகின்றனர். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close