50 இடங்களில் செல்போன் பறிப்பு: கரோகி பாடகர் கூட்டாளியுடன் கைது !

  டேவிட்   | Last Modified : 08 Dec, 2018 12:25 am
two-mobile-phone-thiefs-arrested-in-chennai

50க்கும் மேற்பட்ட இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கரோகி பாடகரையும் அவரது கூட்டாளியையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 15 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

தியாகராயா நகர், தேனாம்பேட்டை, பாண்டிபஜார், மாம்பலம், கோடம்பாக்கம், அஷோக்நகர் உள்ளிட்ட இடங்களில் கடந்த வாரத்தில் அடுத்தடுத்து பலரிடம் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்தது. இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தி.நகர் துணை ஆணையரின் தனிப்படை களத்தில் இறங்கியது.

செல்போன் பறிப்பு நடந்த இடங்களில் கண்காணிப்பு கேமரா பதிவு, செல்போன் ஐஎம்இஐ எண் மற்றும் செல்போன் எண்களை வைத்து ஆராய்ந்ததில் வழிப்பறி நபர் ஆக்டிவா இருசக்கர வாகனத்தை பயன்படுத்துவது தெரியவந்தது. அவரது செல்போன் எண்ணையும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

ஆனால் அந்த நபர் ஆக்டிவா வாகனத்தை விட்டுவிட்டு புதிய வாகனம் ஒன்றை வாங்கி அதில் குற்றச்செயலில் ஈடுபடுவது தெரியவந்தது. இந்நிலையில் அந்த நபர் தனது காதலியைப் பார்க்க வந்தபோது போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில் அந்த நபர் சென்னை மடிப்பாக்கம், ஏரிக்கரை தெருவைச்சேர்ந்த அசார் அலி (28) என்பதும் அவர் ஏற்கெனவே தி.நகர் சத்தியா பஜாரில் செல்போன் கடை வைத்திருந்ததும்,  வழிப்பறி செய்து கொண்டு வரப்படும் செல்போன்களை இவரும், பக்கத்துக்கடைக்காரரான விருதுநகர், திருச்சுழியைச் சேர்ந்த  ரஷீத் அஹமதும் (23) வாங்கி விற்று வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. 
மேலும் தனது கூட்டாளியாக விக்கி (எ) காட்டுப்பூனை என்பவனை சேர்த்துக்கொண்டு தனது ஆக்டிவா வாகனத்தில் சென்று செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிந்தது.   அசார்அலி கொடுத்த தகவலின்பேரில் ரஷீதை கைது செய்து போலீசார் 15 செல்போன்களை கைப்பற்றியுள்ளனர். மேலும் செல்போன்களை கைப்பற்றவும், தப்பி ஓடிய விக்கி (எ) காட்டுப்பூனைய பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close