நெல்லையில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்... கால்நடை சந்தைக்கு தடை !

  டேவிட்   | Last Modified : 08 Dec, 2018 12:27 am
veterinary-market-banned-temporarily-at-tirunelveli

கால்நடைகளை கோமாரி நோய் தாக்கியுள்ளதால், நெல்லையில் கால்நடை சந்தைக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

நெல்லை மாவட்டத்தில் கால்நடைகளை கோமாரி நோய் தாக்கியுள்ளதால் ஆடு, மாடுகள் ஆகியன உயிரிழந்து வருகின்றன. இதனையடுத்து, இந்த நோய் மற்ற கால்நடைகளுக்கு பரவாமல் தடுக்க, வள்ளியூர், கடையம்,நயினாகரம், மேலப்பாளையம், பாவூர்சத்திரம், பாம்புகோவில்சந்தை, முக்கூடல், ரெட்டியார்பட்டி, திருவேங்கடம் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை சந்தைகளுக்கு இன்று (டிச.8) முதல் 22ஆம் தேதி வரை தற்காலிக தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close