ஸ்ரீரங்கம் - பகல்பத்து முதலாம் திருநாள்

  அனிதா   | Last Modified : 08 Dec, 2018 09:51 am

srirangam-vaikunta-ekadasi-festival

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில், பகல்பத்து முதலாம் திருநாளான இன்று நம்பெருமாள் வைர அபயஹஸ்தம், லட்சுமி பதக்கம், முத்து ஆரங்கள் உள்ளிட்ட ஆபரணங்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோகவைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்திபெற்றது. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நேற்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து பகல்பத்து முதலாம் திருநாளான இன்றும் நம்பெருமாள், நீள்முடி அணிந்து வைர அபயஹஸ்தம், மார்பில் லட்சுமி பதக்கம், முத்து ஆரங்கள், காசு மாலை உள்ளிட்ட ஆபரணங்களுடன் அர்ச்சுனமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் எனப்படும் சொக்கவாசல் திறப்பு வரும் 18ம் தேதி அதிகாலை நடைபெறுகிறது. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close