கும்பகோணம் நாகநாதசுவாமி கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு தேரோட்டம்...!

  அனிதா   | Last Modified : 08 Dec, 2018 11:14 am
kumbakonam-naganathaswamy-temple-karthikai-last-sunday-terottam

கும்பகோணம் நாகநாதசுவாமி கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். 

நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு உரிய தலமாக விளங்கும் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் கடை ஞாயிறு பெருவிழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஒன்பதாம் நாளான இன்று பஞ்சமூர்த்திகள் தேரில் எழுந்தருள திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

கடை ஞாயிறு திருவிழவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி, நாளை பிற்பகல் ஒரு மணியளவில் திருக்கோவில் சூரிய புஷ்கரணியில் நடைபெறவுள்ளது. பஞ்ச மூர்த்திகள் தனித்தனி வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருள பின்பு கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close