புதிய உத்தியில் லஞ்சம் பெறும் காவல்துறையினர்...!

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 08 Dec, 2018 04:03 pm
rameswaram-police-getting-bribe-technically

நேரடியாக லஞ்சம் வாங்கினால் தானே ஃபோட்டோ, வீடியோ எடுத்துப் போட்டு புகார் கொடுப்பீங்க? டெக்னிக்கலா வசூல் பண்றோம் பாரு என்று புதுவித வசூல் பண்ணுகிறார்கள் இராமேஸ்வர ட்ராஃபிக் போலீஸ்காரர்கள்.

இராமேஸ்வரம், ஸ்ரீ ராமநாத ஸ்வாமி கோவிலைச் சுற்றி நிறைய தனியார் பார்க்கிங் இடங்கள் உண்டு. வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள், தங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு இயற்கை உபாதைகளை முடிக்கவும், அக்கினித் தீர்த்தத்தில் நீராடி விட்டு வந்து குளிக்கவும் வசதியாக கட்டி வைத்து தொழிலாகச் செய்து வருகின்றனர். கார் பார்க்கிங் கட்டணம் ரூ 50/- என வசூலித்து வந்தனர். இப்பொழுது கார் பார்கிங் கட்டணமாக ரூ.100/- வசூலிக்கிறார்கள். ரசீதும் கொடுப்பதில்லை. ஏனென்று கேட்டால், ஒரு காருக்கு ரூ 50/- என்ற வீதம் ட்ராஃபிக் போலீஸ்க்குப் பணம் கொடுக்கணும்.  கொடுக்காவிட்டால், வழியெங்கும் ட்ராஃபிக் போலீஸ், எங்கள் கார் பார்கிங் பக்கம் வாகனங்கள் வராமல் தடுத்து வேறுபக்கம் அனுப்பிவிடுவர் என்கிறார்கள். 

என்ன செய்கிறார்கள் என்று நின்று கவனித்தால்,  போக்குவரத்தினைக் கவனிக்கும் காவலர்கள் சாலையில் நின்று கொண்டு, தங்களுக்கு வேண்டிய பார்க்கிங் பக்கம் கார்களை வலுக்கட்டாயமாகத் திருப்பி விடுகின்றனர். தடுத்தவர்களிடம் நாங்கள் உள்ளேயிருக்கும் தமிழ்நாடு ஹோட்டலில் தங்கப்போகிறோம் என்று சொல்லி விட்டு கிளம்பினால், நம் வாகன எண்ணைக் குறித்துக் கொண்டு தனியாக பைக் எடுத்து வந்து ஒவ்வொரு பார்கிங்காக வந்து செக் பண்ணி அதற்கும் சேர்த்து வசூலிக்கிறார்கள். 

கூட்டமில்லாத காலங்களில் ரூபாய் ஐம்பதும், கூட்டமான காலங்களில் ரூ 100/- வரையும் வசூல் நடக்கிறதாம். அதாவது, அங்கேயுள்ள தனியார் பார்க்கிங்-க்கு எத்தனை கார் போக வேண்டும் என்பதைக் கூட ராமேஸ்வரம் ட்ராஃபிக் போலீஸார் தான் முடிவு செய்கிறார்கள். முன்பெல்லாம் இதே வேலையை உள்ளூர் ரவுடிகள் செய்து வந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்ப ரவுடிகளின் வேலையை போலீஸ் எடுத்துக் கொண்டார்கள் போல? 

காவல்துறை தன் அறிவையும் திறமையையும் திருடர்களைப் பிடிக்க பயன்படுத்துவார்கள் என்ற நிலை போய், இப்படி திருட்டு வேலை செய்வதற்கு பயன்படுத்தினால், காவல்துறை மீது மக்களுக்கு இருக்கும் மரியாதையும் பயமும் விலகி அவப்பெயரும், அலட்சியப் பார்வையும் தான் மிஞ்சும்.

இதை உடனடியாக கவனத்தில் கொண்டு, தமிழகக் காவல்துறை, தமிழகச் சுற்றுலாத்துறை, தமிழக உள்துறை நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close