மதுரையில் பழமையான பாலத்திற்கு பிறந்தநாள் கொண்டாடிய பொதுமக்கள்....!

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 04:11 pm
people-celebrating-the-birthday-of-the-oldest-bridge-in-madurai

மதுரையில் மிகப்பழமையான ஏவி பாலத்திற்கு பொதுமக்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.

மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள ஏவி (ஆல்பர்ட் விக்டர்) பாலம், கடந்த 1886ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் ஆல்பர்ட் விக்டர் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டு 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இதன் ஆயுள் காலம் ஐம்பது ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் 100 ஆண்டுகளையும் தாண்டி இன்று 133ஆம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் அளவிற்கு கம்பீரமாக காட்சியளிக்கிறது.

இதன் உறுதிதன்மையை போற்றும் வகையில், மதுரையை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வைகை நதி மக்கள் இயக்கம் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த பாலத்தின் கல்வெட்டிற்கு அருகே கேக் வெட்டி 133வது ஆண்டை கொண்டாடினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close