அரையாண்டு தேர்வு வினாத்தாள் திருட்டு...!

  Newstm Desk   | Last Modified : 09 Dec, 2018 05:48 pm
half-yearly-examination-question-paper-theft

தமிழகத்தில் நாளை அரையாண்டு தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு வினாத்தாள்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அரசு உதவி பெறும் நகரத்தார் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அலுவலகத்தில் அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாள் வைத்து பூட்டப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, 6 முதல் 10 வகுப்பு வரையிலான தமிழ், ஆங்கிலம் வினாத்தாள்கள், 12ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், கணக்கு ஆகிய பாடங்களின் வினாத்தாள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வினாத்தாள் திருடப்பட்டது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலரும் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. நாளை அரையாண்டு தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், வினாத்தாள் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close