பாஜகவின் கைப்பிள்ளையாக செயல்படுகிறார் முதல்வர்: கே.பாலகிருஷ்ணன்

  Newstm Desk   | Last Modified : 10 Dec, 2018 01:49 pm
k-balakrishnan-press-meet

பாஜகவின் கைப்பிள்ளையாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எட்டு வழி சாலை அமைப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால், அதையும் மீறி அரசு நிலம் கையகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வதாக தகவல் வெளியாகி வருகிறது. இது விவசாயிகளை அழிப்பதற்கான செயலாகவே பார்க்கப்படுகிறது. பாஜகவின் கைப்பிள்ளையாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், அமைச்சர்களும் செயல்பட்டு வருகின்றனர். மேகதாதுவில் கட்டப்படும் அணையால் தமிழகத்துக்கு நலன் இருப்பது போல் கர்நாடக அரசு நாடகமாடி வருகிறது. மேகதாது அணை விவகாரத்தில் கட்சி வேறுபாடு இல்லாமல் ஒன்றிணைந்து போராட வேண்டும் என வலியுறுத்தினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close