பனை, தென்னை பாதுகாப்பு பிரசாரப் பயணம் தொடக்கம்...

  அனிதா   | Last Modified : 17 Dec, 2018 01:23 pm
palm-coconut-protection-rally

கோவையில் இருந்து சென்னை வரை பனை, தென்னைகளை பாதுகாக்க வலியுறுத்திய பிரசாரப் பயணம் கோவையில் இருந்து இன்று தொடங்கியது. 

பனை மரத்தில் இருந்து நீரா பானம் இறக்கி உள்நாட்டிலும், உலக அளவிலும் விற்பனை செய்ய அனுமதியளிக்க வேண்டும். பனை, தென்னை கருப்பட்டிக்கு மானியம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கோவை, கோபாலபுரத்தில் உள்ள விவசாய சங்க மாவட்ட தலைமை அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்தப் பயணத்தை தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தொடங்கி வைத்தார். இந்த பிரசாரப் பயணம், திருப்பூர், ஈரோடு, சேலம் உட்பட பல மாவட்டங்கள் வழியாக பயணம் செய்து வரும் 19ம் தேதி சென்னையை அடைய உள்ளது. சென்னையில், முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து விவசாயிகள் தங்களது கோரிக்கையை முன்வைக்கவுள்ளனர். 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close