ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு...!

  Newstm Desk   | Last Modified : 18 Dec, 2018 09:17 am
srirangam-paramapatha-door-open

பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் இன்று காலை 5.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோகவைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி கடந்த 7ம் தேதி நெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் பகல் பத்து உற்சவம் நடைபெற்றது வந்தது. 

இராப்பத்து திருவிழாவின் முதல்நாளான இன்று, விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் ரத்தின அங்கியணிந்து சொர்க்கவாசல் வழியாக திருக்கொட்டகையில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு பரமபதவாசல் வழியாக பிரவேசித்து தரிசித்தனர்.

பின்னர் சாதரா மரியாதையுடன், ஆயிரங்கால் மண்டபத்தினருகே திருமாமணி ஆஸ்தான மண்டபத்தினை வந்தடைந்து பக்தர்களுக்கு பொது ஜன சேவை கண்டருளினார். லட்சக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளை நீண்டவரிசையில் நின்று பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் பாதுகாப்பிற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close