ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்....!

  Newstm Desk   | Last Modified : 20 Dec, 2018 03:54 pm
college-students-demonstrated-on-sterlite-plant-closed-permanently

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றதை தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது. இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு அனுமதியளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close