கும்பகோணத்தில் கிறிஸ்மஸ் தாத்தாக்கள் பேரணி...!

  டேவிட்   | Last Modified : 20 Dec, 2018 07:39 pm
christmas-programme-at-kumbakonam

கிறிஸ்மஸ் பெருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் நகரில் இன்று (டிச.20) மாலை  நடைபெற்ற கிறிஸ்துமஸ் தாத்தாகளின் பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 

இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் நகரில் இன்று (டிச.20) மாலை கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் பேரணி நடைபெற்றது . பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கிறிஸ்த்துமஸ் தாத்தா வேடம் அணிந்து இதில் பங்கேற்றனர் .

கும்பகோணம் கத்தோலிக்க  மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்ற இப்பேரணி, தூய அலங்கார அன்னை ஆலயத்திலிருந்து தொடங்கியது. நகரின் முக்கிய வழியாக சென்ற இப்பேரணி, புறப்பட்ட இடத்திலேயே நிறைவுபெற்றது. இதில் நகர முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close