கும்பகோணம்: தொழிலதிபர் வீட்டில் பணம், நகை கொள்ளை; போலீசார் விசாரணை !

  டேவிட்   | Last Modified : 23 Dec, 2018 06:47 pm
kumbakonam-theft-in-industrialist-home

கும்பகோணம்  ஸ்ரீநகர் காலனியில் பூட்டி இருந்த தொழிலதிபர் ராம்குமார் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து 60 சவரன் நகைகள், வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி் மெயின் ரோட்டில் வசிப்பவர் ராம்குமார் . கும்பகோணம் மற்றும் ஆடுதுறையில் இவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகளை சேலத்தில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வருவதற்காக வீட்டை பூட்டிவிட்டு கடந்த வெள்ளி இரவு சென்றுள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வீட்டின் முன்பக்க கதவு திறந்து இருப்பதாக வீட்டு வேலை செய்பவர் கூறிய தகவலை தொடர்ந்து ராம்குமார் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .உள்ளே சென்று பார்த்தபோது அதில் இருந்த தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. முதல் கட்டமாக 60 சவரன் நகைகள் மற்றும் வைர நகைகள் 5 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனதாக கூறப்படுகிறது .இதுகுறித்து ராம்குமார் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close