மாரியம்மனை மேரியம்மனாக அலங்காரம்... பண்ருட்டியில் பரபரப்பு...!

  Newstm Desk   | Last Modified : 26 Dec, 2018 07:17 pm
panrutti-mary-amman-mari-amman

பண்ருட்டி அருகே உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில், கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி,  அம்மனை மேரிமாதாவைப் போல் அலங்கரித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து அமைப்பினர் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எல்.ஆர். பாளையத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆதிபராசக்தி அம்மனும், கோயில் வளாளத்தில் நாக கன்னியும் உள்ளது.  இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிப்பாடு செய்வது வழக்கம். 

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையடுத்து,  கருவரறயில் இருந்த ஆதிபராசக்தி அம்மன், மேரி மாதா அலங்காரத்தில், கையில் குழந்தை மற்றும் சிலுவையுடன் காணப்பட்டார். இதேப்போல் கோயில் வளாகத்தில் இருந்து நாக கன்னியும் மேரி மாதா அங்காரத்தில் காணப்பட்டார். இன்று கோயிலுக்கு வந்த பக்தர்கள் இதனைப் பார்த்து அதிர்சியடைந்தனர். இந்த தகவல் தீ போல் பரவியது. உடன் கடலூர் மாவட்ட இந்து முன்னணி அமைப்பாளர் நாராயணன் தலைமையில் விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் சீனிவாசன் மற்றும் பாஜகா மாவட்ட பொதுச் செயலாளர் சக்திகணபதி, இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் தேவா மற்றும் ஆதிபராசக்தி வழிப்பாட்டு  மன்றத்தினர் என 100க்கும் மேற்பட்டோர், கோயில் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தகவலறிந்த பண்ருட்டி டிஎஸ்பி சுந்தரவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்பொழுது காலம், காலமாக சாமிக்கு எப்படி அலங்காரம் செய்ய வேண்டும் என புனிதமான வழக்கங்களை தங்கள் இஷ்டத்திற்கு எப்படி மாற்றம் செய்யலாம் எனவும், இச்செயலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் அம்மனுக்கு செய்யப்பட்டிருந்த மேரி மாதா அலங்காரம் அகற்றப்பட்டு, பழைய முறைப்படி அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் இச்செயலில் ஈடுப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்பினர் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close