புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாகன சோதனை தீவிரம்...!

  சாரா   | Last Modified : 31 Dec, 2019 05:26 pm
police-production-in-tamilnadu

புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

சென்னையில், புத்தாண்டை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும்  குறித்தும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைப்பெற்றது.

"மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வணிக வளாகங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

தீவிரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவி இருப்பதாக வெளியான தகவலை அடுத்து, புத்தாண்டு கொண்டாட்ட நேரங்களில் தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பண்டிகைக் காலங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படவும் உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து, அனைத்து மாவட்ட போலீசாருக்கும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழகம் முழுவதும் வாகன சோதனையைத் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பேருந்து நிலையங்கள் அருகே, தேசிய நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு, சந்தேகப்படும் விதத்தில் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தவும், இதற்கு தனியாக போலீசாரை நியமிக்கவும் உத்தர விடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close