தேவாலயத்திற்குள் சடலங்கள் புதைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..!

  Newstm Desk   | Last Modified : 27 Dec, 2018 09:54 am
the-shocking-incident-was-dead-body-buried-in-the-church

சென்னை குடியிருப்பு பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் ரகசியமாக கான்கிரீட் கல்லறைகள் அமைக்கப்பட்டு சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பொழிச்சலூரில் மலபார் கத்தோலிக்க சபைக்கு சொந்தமான புனித அல்போன்சா தேவாலயம் உள்ளது. குடியிருப்பு பகுதியில் உள்ள இந்த தேவாலயத்திற்குள், கடந்த 23ம் தேதி முதியவரின் சடலம் எடுத்துச்செல்லப்பட்டது. ஆனால் நீண்ட நேரமாகியும் சடலத்தை வெளியில் கொண்டு வராததால் சந்தேகம் அடைந்த இந்து மக்கள் கட்சியினர் காவல்துறை மற்றும் வருவாய்துறையினரிடம் புகார் அளித்தனர். 

இதையடுத்து வருவாய் துறையினர் நேற்று அதிரடியாக தேவாலயத்திற்குள் நுழைந்த சோதனை நடத்தினர். அப்போது, தேவாலயத்திற்குள் உள்ள ஒரு அறையில் 12 அறைகளுடன் கூடிய கான்கிரீட் கல்லறை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அதனை உடைத்து பார்த்தபோது, அந்த முதியவரின் சடலம் அங்கே அடக்கம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து முதியவரின் சடலத்தை கைப்பற்றி மாநகராட்சி இடுகாட்டுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து, சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கல்லறைக் கூடத்துக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close