நெல்லை: கொதிக்கும் எண்ணெய்க்குள் கையை விட்டு வடை எடுக்கும் பூஜை! (வீடியோ காட்சிகள்)

  டேவிட்   | Last Modified : 28 Dec, 2018 04:34 pm
nellai-ayyappan-devotees-taking-vada-from-hot-oil

நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆவுடையாள்புரத்தில், ஐயப்ப பக்தர்கள் கொதிக்கும் எண்ணைக்குள் கையை விட்டு வடை எடுக்கும் பூஜை, காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது. 

நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுக்கா, விஜயாபதி கிராமத்தில் உள்ள ஆவுடையாள்புரத்தில், ஐயப்ப பக்தர்கள் மண்டல் பூஜை செய்தனர். இந்த பூஜையில், வாணலியில் கொதித்துக் கொண்டிருக்கும் எண்ணெயில் வடைக்கான மாவு போடப்பட்டிருந்தது. வடை வெந்ததும், அந்த எண்ணெயிலிருந்து வடையை, பக்தர்கள் தங்களது கைகளால் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்தனர். ஒவ்வொருவராக வந்து இப்படி கொதிக்கும் எண்ணெயில் இருந்து வடையை எடுத்து பூஜை செய்தது, அதனைக் காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது. இதன் வீடியோ காட்சிகள் தற்போது வைராலாகி வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close