தேனாம்பேட்டையில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் செயல்பாடு தொடக்கம்

  Newstm Desk   | Last Modified : 29 Dec, 2018 02:46 pm
the-functionality-of-the-newly-installed-cctv-cameras-in-thenambet

சென்னை தேனாம்பேட்டையில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 1621 கேமராக்களின் செயல்பாட்டை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

சென்னையில் குற்றங்களை தடுக்க மாநகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட 313 இடங்களில் 680 சிசிடிவி கேமராக்களும், செளந்தரபாண்டியனார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 567 இடங்களில் 943 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.

புதிதாக பொருத்தப்பட்டுள்ள இந்த 1621 கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையாளர் திரு. மகேஷ் குமார் அகர்வால், தெற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி மகேஸ்வரி, தியாகராய நகர் மாவட்ட துணை ஆணையர் அரவிந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய சென்னை பெருநகர காவல் ஆணையர், சென்னை தேனாம்பேட்டையில் 36 கிலோமீட்டர் சுற்றுப்பகுதிகளில் 1621  சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் பொருதப்பட்டதன்  மூலம் சென்னை மாநகரில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. மேலும் காவல்துறையினரின் வேலையை சுலபமாக்கி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க இது ஏதுவாக உள்ளது என தெரிவித்தார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close