காப்பீடு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்..!

  Newstm Desk   | Last Modified : 30 Dec, 2018 01:02 pm
awareness-of-insurance

சேலத்தில் எல்ஐசி காப்பீடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்தியாவில் மொத்தம் 24 காப்பீடு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை ஐஆர்டிஏ என்கிற தன்னிச்சையான அரசு அமைப்பு கண்காணிக்கிறது. மேலும் இந்தியாவின் முக்கிய காப்பீடு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தில் 1.20 லட்சம் பேர் நேரடியாக பணிபுரிகின்றனர். சுமார் 12 லட்சம் பேர் முகவர்களாக உள்ளனர்.  இதில் குடும்பத்திற்கான பாதுகாப்பு, முதலீடு, ஆயுள் காப்பீடு, மருத்துவம், கல்வி,  பயணம் என பல்வேறு பயன்பாடுகளுக்கு காப்பீடு சேவைகளை வழங்கி வருகிறது. 

இந்நிலையில் எல்ஐசி காப்பீடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேலத்தில் மினி மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதனை சேலம் மாநகர காவல் துணை ஆணையர் தங்கதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இந்த மராத்தான் ஓட்டமானது அம்பேத்கர் சிலை, வின்சென்ட், அஸ்தம்பட்டி, இராமகிருஷ்ணா சாலை, 4 ரோடு வழியாக மீண்டும் காந்தி விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. இதில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், இளைஞர்கள், முதியவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close