ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு: அந்நியப்பொருட்களை சாலையில் கொட்டி வணிகர்கள் போராட்டம்

  Newstm Desk   | Last Modified : 01 Jan, 2019 04:29 pm
opposition-to-online-trading

கோவையில் ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நிய பொருட்களை சாலையில் கொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்நாட்டு வர்த்தகத்தை முற்றிலும் பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி , தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கோவை தெற்கு வாட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்,வணிகர்கள் அந்நிய பொருட்களை உடைத்தும், மிதித்தும், குளிர்பானங்களை கீழே ஊற்றியும்,  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்நிய பொருட்களை புறக்கணிக்க கோரியும் கோக், பெப்சியால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போனதாக கூறியும், ஆன்லைன் வர்த்தகத்தால் சுயதொழில் விற்பனை நலிவடைந்ததாகவும் கூறி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.  

இன்று முதல் ஜனவரி 6ம் தேதி வரை தமிழகத்தின் ஆறு முக்கிய நகரங்களில் அந்நிய பொருட்களை தீக்கிரையாக்கும் போராட்டம் தொடர இருப்பதாக வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close