கோவை: பொங்கல் பண்டிகையையொட்டி 110 பேருந்துகள்...! 

  டேவிட்   | Last Modified : 02 Jan, 2019 04:42 pm
coimbatore-110-buses-in-connection-with-pongal-festival

வரும் ஜனவரி 10-ம் தேதி முதல் வெளியூர்களுக்கு செல்ல தினமும் சுமார் 110 பேருந்துகளை இயக்க கோவை அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

ஜனவரி மாதம் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தொழில் நகரமான கோவைக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து வந்து தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர், சிலர் சொந்தமாக தொழில் செய்தும் வருகின்றனர். இதன் காரணமாக, பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோர் கோவையில் ஏராளம்.

கோவையிலிருந்து செல்லும் பயணிகளுக்கு பேருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, திருநெல்வேலி, ராமேஸ்வரம், மதுரை, தேனி, தூத்துக்குடி, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகளின் கூட்டத்தைப் பொறுத்து, ஜனவரி 10-ம் தேதி முதல் தினமும் 110 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "வரும் ஜனவரி 10-ம் தேதி முதல் பொங்கலுக்கு வெளியூர் செல்வோருக்காக தினமும் 110 பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளோம். பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், மேலும் பேருந்துகளை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். அதேபோல, பயணிகளின் கூட்டம் குறையும் வரை இயக்க திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close