சத்துணவு பொருட்களை திருடுவதாக ஊழியர்கள் மீது பள்ளி மாணவர்கள் புகார்..!

  Newstm Desk   | Last Modified : 03 Jan, 2019 01:22 pm
students-complain-about-nutritious-stuff

திருச்சியில் அரசு உதவி பெறும் பள்ளியில் சத்துணவு பொருட்களை திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி, டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அரசு உதவி பெறும்  பள்ளி  உள்ளது. இந்த பள்ளியில் தொடர்ந்து சத்துணவு பொருட்களை சத்துணவு உதவியாளர்களே திருடி வருவதாகவும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டால், அவர்கள் தட்டிக்கேட்கும் மாணவர்களை தகாத வார்த்தைகளில் பேசி அடிப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், சத்துணவு பொருட்களை திருடுபவர்கள் மீதும்,மாணவர்களை தகாத வார்த்தையில் திட்டும் ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பள்ளியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருச்சியில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் உரிய விசாரணை நடத்தப்படும் என கல்வி துறை அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close