சேலத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான தேசிய அளவிலான கண்காட்சி! 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 01:23 pm
salem-project-exhibition-by-polytechnic-students

சேலத்தில் நடைபெற்ற  பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான  தேசிய அளவிலான ப்ராஜெக்ட் கண்காட்சியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

சேலம் ஏவிஆர் ரவுண்டானா அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான தேசிய அளவிலான கருத்தரங்கு, வினாடி-வினா மற்றும் ப்ராஜெக்ட் கண்காட்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 80 க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 8 தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளும், 120க்கும் மேற்பட்ட ப்ராஜெக்ட்களை காட்சிக்கு வைத்திருந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வினாடி வினா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். 

இக்கண்காட்சியில் நவீன நகராக்கம் திட்டம், ஸ்மார்ட் நகரம், தானியங்கி தெருவிளக்கு, தானியங்கி சிக்னல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், உப்பு நீரிலிருந்து மின்சாரம் தயாரித்தல், கிரீன்ஹவுஸ், குழந்தை கண்காணிப்பு ஆடை, ஸ்மார்ட் பள்ளி உள்ளிட்ட பல்வேறு ப்ராஜெக்டுகளை மாணவ மாணவிகள் பார்வைக்கு வைத்திருந்தனர். 

மாணவ மாணவிகளின் கைவண்ணத்தில் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த பிராஜெக்ட்கள் பார்வையாளர்களின் கண்ணையும் கருத்தையும் வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு தலைப்பிற்கும் முதல் பரிசாக 2,500 ரூபாயும் இரண்டாம் பரிசாக 1,500 ரூபாயும் மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close