பிளாஸ்டிக் தடைக்கு எதிராக துணிப்பை தயாரிக்கும் பணியில் கோவை சிறைவாசிகள்!

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 01:29 pm
plastic-banned-in-tn-kovai-central-jail-convicts-is-making-bags

தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்டதையடுத்து, துணிப்பைகளின் தேவை அதிகரித்துள்ளதால் கோவை மத்தியசிறையில் உள்ள சிறைவாசிகள் துணிப்பை, சணல்பை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

நிலம், நீர், காற்று போன்ற பல்வேறு நிலையில் மாசு ஏற்படுத்தி மனித உயிருக்கும், விலங்குகளுக்கும், சுகாதாரத்திற்கும், பிளாஸ்டிக் பொருட்கள் பெரும் தீங்குகளை விளைவித்து வருகிறது. ஆகவே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழகத்தில் இந்த ஆண்டு, தொடக்கத்தின் முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி, இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர் டம்ளார் ,தண்ணீர் டம்ளார், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ் தமிழக அரசு தடை செய்துள்ளது.

ஆகவே, பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து துணிப்பையை பயன்படுத்த முன்வந்துள்ளனர். இதனால், பொதுமக்களிடம் துணிப்பை பயன்பாடு அதிகரித்துள்ளதால், துணிப்பை மற்றும் சணல் பைகளின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பயன்பாடுகளுக்கு ஏற்ப துணிப்பைகளின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறைந்து, துணிப்பை தேவை அதிகரித்துள்ளதால், துணிப்பை, சணல் பை விற்பனை செய்யும் கடைகளில் வியாபாரிகளும் பொதுமக்களும் குவிந்து வருகின்றனர். இதனால், துணிப்பை எண்ணிக்கைகளை அதிகரிக்க அரசின் அங்கத்தினர்களும், தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மத்திய சிறையில் 2,000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு சிறை நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு கைத்தொழில்கள் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழக அரசின் பிளாஸ்டிக் தடையை கருத்தில் கொண்டு, சிறை நிர்வாகத்தின் சார்பில் சிறைவாசிகளால் துணிப்பைகள், சணல் பைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராகி உள்ளது.

சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள சிறை பஜாரில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், சணல் பைகள் மூன்று விதமான அளவுகளில் ரூ. 80, ரூ. 120, ரூ. 140 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களிடம் வரவேற்பு எழுந்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close