மணப்பாறையில் கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் சாலை மறியல்!

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 01:55 pm
manapparai-college-students-protest

மணப்பாறையில் பேருந்தில் ஏற்ற மறுப்பதை கண்டித்து கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் திருச்சி அருகே வண்ணாங்கோவில் பகுதியில் உள்ள தேசிய சட்டக்கல்லூரி, அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு அரசு கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இதற்காக அரசின் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பஸ் பாஸ் உள்ள மாணவ, மாணவிகளை அரசு பேருந்துகளில் ஏற்ற மறுப்பதாகவும், கல்லூரி உள்ள பகுதிகளில் பஸ் நிறுத்தம் இல்லை என்று கூறியும் மாணவ, மாணவிகளை பேருந்தில் ஏற அனுமதிக்காததால் உரிய  நேரத்தில் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் இன்று காலை மணப்பாறை பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பஸ் பாஸ் உள்ள மாணவ, மாணவிகள் அரசு பேருந்தில் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close