பிளாஸ்டிக் அல்லாத பொருட்களும் பறிமுதல்: ஆட்சியரிடம் புகார் !

  டேவிட்   | Last Modified : 04 Jan, 2019 04:45 pm

non-plastic-good-seized-by-officers-complaint-to-collector

தமிழக அரசு தடைவிதித்த பிளாஸ்டிக் பொருட்கள் மட்டும் அல்லாமல் மற்ற பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்வதாக பிளாஸ்டிக் பொருள் விற்பனையாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமல் படுத்தியதை தொடர்ந்து, தடை செய்யப்பட்ட 14 வகை பிளாஸ்டிக் பொருட்களையும் அறிவித்து, விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் கோவை மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் விற்பனை மற்றும் இதர கடைகளில் சோதனை மேற்கொண்டு, தடைவிதிக்கப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.  

இதில் அரசு தடை விதிக்காத பொருட்களையும் அதிகாரிகள் வேண்டுமென்றே பறிமுதல் செய்து எடுத்து செல்வதாகவும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கபடுவதாக தெரிவித்து, கோவை பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தினர் கோவை மாநகராட்சி ஆனையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். தொடர்ந்து அதிகாரிகள் இதுபோல் தடையில்லா பொருட்களை பறிமுதல் செய்வதால், கடந்த 3 நாட்ளாக கோவை மாவட்டம் முழுவதும் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடைகளை அடைக்கப்பட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.