திருச்சியில் ஸம்ஸ்க்ருதபாரதி மாநில மாநாடு நாளை தொடக்கம் !

  டேவிட்   | Last Modified : 04 Jan, 2019 07:46 pm
trichy-samaskritha-festival

ஸம்ஸ்க்ருதபாரதி என்ற அரசுசாரா தொண்டு நிறுவனம் நடத்தும் ஸம்ஸ்க்ருதபாரதி மாநில மாநாடு திருச்சியில் நாளை தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பரநூர் கிருஷ்ணபிரேமி சுவாமி துவக்கி வைக்கிறார். 

ஸம்ஸ்க்ருத மொழியின் தனித் தன்மையையும், பன்முக மேன்மையையும் வெளிப்படுத்தும் விதமாக, ஸம்ஸ்க்ருதபாரதி அமைப்பின் பலவித செயல்பாடுகளை பொதுமக்கள் அறியச் செய்யும் பொருட்டும், ஸம்ஸ்க்ருத ஆர்வலர்கள் ஒருங்கிணைவதற்கும், ஸம்ஸ்க்ருதபாரதி மாநில மாநாடு நாளையும், நாளை மறுநாளும் (ஜனவரி 5 மற்றும் 6) திருச்சிராப்பள்ளி ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. 

இந்த மாநாட்டில் 600க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்களும், 3000க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். மாநாட்டை பரநூர் கிருஷ்ணபிரேமி சுவாமிகள் துவக்கி வைக்கிறார்.  

பண்டிதர்கள் மட்டுமல்லாமல் ஸம்ஸ்க்ருதத்தை பாமரர்களும் கற்று, எளிதாக கையாள ஸம்ஸ்க்ருதபாரதி அமைப்பு பயிற்சி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பயன் அடையவேண்டும் என்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் என ஸம்ஸ்க்ருதபாரதி அமைப்பு தெரிவித்துள்ளது.  

மாநாட்டின் நிறைவு விழாவான 6ஆம் தேதி மாலை  4 மணிக்கு மத்திய அமைச்சர் அனந்த குமார் ஹெக்டே  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். மேலும், புதிய தமிழக கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்கின்றனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close