காவல் ஆணையர் அமல்ராஜின் "வெற்றியாளர்களின் வெற்றிப்படிகள்" நூல் வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 10:38 am
trichy-police-commissioner-amalraj-s-book-release

திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் எழுதிய "வெற்றியாளர்களின் வெற்றிபடிகள்" என்ற நூல் வெளியீட்டு விழாவில், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மணிசங்கர் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார்.

திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜ் எழுதிய வெற்றியாளர்களின் வெற்றிபடிகள் என்ற நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நேற்று நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மத்திய மண்டல காவல் துறை தலைவர் வரதராஜீ, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள்  பங்கேற்றனர்.

பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மணிசங்கர்  நூலை வெளியிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமல்ராஜ், "வெற்றி என்பது ஒவ்வொரு மனதிலும் எழும் இனம்புரியாத தாகம். முயற்சிக்கும் வெற்றிக்கும் நேரடி தொடர்பு உண்டு. வெற்றி பெறுவதற்கான அடிப்படை தேவை என்ன என்பது குறித்து இந்நூலில் கூறியுள்ளேன். இளைஞர்கள் சீறிய முறையில் வாழ்க்கையில் வெற்றிபெற இந்நூல் உதவும்" என்றார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close