ஜன.7 முதல் தொடர் வேலை நிறுத்தம்: நில அளவையர்கள் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 11:25 am
strike-announcement-of-land-surveyors

தமிழகம் முழுவதும் வரும் 7-ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக நில அளவையர்கள் அறிவித்துள்ளனர்.

உட்பிரிவு பட்டா மாறுதலில் தற்போதைய நிலையை தொடர வேண்டும்,  இயக்குநர், கூடுதல் இயக்குநர் பொறுப்பை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அப்போது, மாநில செயலாளர் முருகேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "உட்பிரிவு பட்டா மாறுதலில் தற்போதைய நிலையை தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கடந்த டிசம்பர் மாதம் 18, 20, 27 ஆகிய மூன்று நாட்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றும் தமிழக அரசு இதுவரை தீர்வு காணவில்லை. எனவே வரும் 7 -ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close