கும்பகோணம்: கடத்தப்பட்ட கல்லூரி மாணவன் கழுத்தறுத்து படுகொலை

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 12:55 pm
kumbakonam-abducted-college-student-killed

கும்பகோணம் அருகே ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவன், கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சை மாவட்டம், அவணியாபுரத்தை சேர்ந்தவர் சாகுல்ஹமீது. இவர் தற்போது துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மும்தசிர்(19) மயிலாடுதுறையில் உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்றிரவு திருமங்கலக்குடியில் உள்ள அக்கா வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு, இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் வீட்டிற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தன்னை கடத்திவிட்டதாகவும், ரூ.5 லட்சம் எடுத்து கொண்டு கோவையில் வந்து தரும்படியும் கூறியுள்ளார். அதன் பிறகு அவரது செல்போன் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால், உறவினர்களால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. 

இந்நிலையில், இன்று காலை திருபுவனம் அருகே காவிரி ஆற்றங்கரையில் மும்தசிர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து திருவிடைமருதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close