அனுமன் ஜெயந்தி: துடியலூர் ஆஞ்சநேயர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 03:19 pm
hanuman-jayanti-special-puja

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு துடியலூர் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

அனுமன் ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அமாவாசை மூலநட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் அவதரித்த நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று அனுமன் ஜெயந்தியையொட்டி, கோவில்களில், அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு செய்தனர். 

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் துடியலூரை அடுத்துள்ள ஜெங்கமநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ள நவாம்ஸ ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோவிலில்  8– ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அனுமன் தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close