அடையாறு; 56 கேமராக்களின் இயக்கத்தை தொடங்கி வைத்தார் ஏ.கே.விஸ்வநாதன்

  அனிதா   | Last Modified : 05 Jan, 2019 04:31 pm
a-k-viswanathan-is-activate-the-function-of-56-cameras-in-adyar

சென்னை அடையாறு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். 

சென்னையில், தொடர் குற்ற சம்பவங்களை தடுக்கம்வும், குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறியவும் சென்னை காவல்துறை சார்பில், கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காணிப்பு கேமராக்கள் போக்குவரத்து காவல்துறை கட்டுபாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக, சென்னை அடையாறில் 56 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களின் இயக்கத்தை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர் அருண், தெற்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையாளர் சுதாகர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close