திருச்சியில் ஸம்ஸ்க்ருதபாரதி மாநில மாநாடு தொடங்கியது !

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 04:30 pm
sanskrit-bharti-meeting-at-trichy

ஸம்ஸ்க்ருதபாரதி என்ற அரசுசாரா தொண்டு நிறுவனம் நடத்தும் ஸம்ஸ்க்ருதபாரதி மாநில மாநாடு திருச்சியில் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. 
 

ஸம்ஸ்க்ருத மொழியின் தனித் தன்மையையும், பன்முக மேன்மையையும் வெளிப்படுத்தும் விதமாக, ஸம்ஸ்க்ருதபாரதி அமைப்பின் பலவித செயல்பாடுகளை பொதுமக்கள் அறியச் செய்யும் பொருட்டும், ஸம்ஸ்க்ருத ஆர்வலர்கள் ஒருங்கிணைவதற்கும், ஸம்ஸ்க்ருதபாரதி மாநில மாநாடு இன்றும், நாளையும் (ஜனவரி 5 மற்றும் 6) திருச்சிராப்பள்ளி ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. 

நிகழ்ச்சியினை ஆன்மீக சொற்பொழிவாளர் விசாகா ஹரி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.  இந்த மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய சிறப்புரை சத்திய நாராயணன் பேசியபோது, சமஸ்கிருதபாரதியின் தொண்டர்கள் ஆத்ம சந்தோஷம் நிமித்தம் சமஸ்கிருத பாரதிக்கு தொண்டு செய்து வருவதாகவும், சமஸ்கிருத ஆர்வலர்கள பணத்தையோ புகழையோ எதிர் பார்த்து வேலை செய்யவில்லை எனவும் புகழாரம் சூட்டினார். மேலும், பாரதம் ஞான பூமி என்றும், ஞானம் வளர்க்கும் மொழி சம்ஸ்க்ருதம் எனவும் சுட்டிக்காட்டிய அவர், இந்த மாநாட்டிற்கு ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ள பள்ளி  மாணவர்கள் மாணவிகளை பாராட்டினார். ஸமஸ்க்ருத மொழி சிந்தனை வளர்க்கும் மொழி என பறை சாற்றி தன் உரையை முடித்தார்.

மேலும், நிகழ்ச்சியில் மாணவர்கள் படைத்த கட்டுரைகள் மற்றும் ஸ்ம்ஸ்க்ருத மொழியின் அறிவியல் பூர்வமான அம்சங்களை கண்காட்சியாக இடம் பெறச் செய்திருந்தனர். 

பண்டிதர்கள் மட்டுமல்லாமல் ஸம்ஸ்க்ருதத்தை பாமரர்களும் கற்று, எளிதாக கையாள ஸம்ஸ்க்ருதபாரதி அமைப்பு பயிற்சி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பயன் அடையவேண்டும் என்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் என ஸம்ஸ்க்ருதபாரதி அமைப்பு தெரிவித்துள்ளது.  

மாநாட்டின் நிறைவு விழாவான 6ஆம் தேதி மாலை  4 மணிக்கு மத்திய அமைச்சர் அனந்த குமார் ஹெக்டே  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். மேலும், புதிய தமிழக கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்கின்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close