கல்லூரி மாணவர் படுகொலை: குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள்..!

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 04:48 pm
college-student-murder-set-5-special-forces-to-catch-criminals

கும்பகோணம் அருகே கடத்தப்பட்ட கல்லூரி மாணவன் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

தஞ்சை மாவட்டம், அவணியாபுரத்தை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் மும்தசிர்(19). இவர் மயிலாடுதுறை பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவன், சிறிது நேரத்தில் செல்போனில் தொடர்பு கொண்டு தன்னை கடத்தி விட்டதாகவும், ரூ.5 லட்சம் எடுத்துகொண்டு கோவைக்கு வரும்படியும் கூறியுள்ளார். இதையடுத்து போன் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. 

இதனிடையே மாணவன், இன்று காலை திருபுவனம் அருகே கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்தால் தான் மாணவன் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் பெற்றக்கொள்ளப்படும் என உறவினர்கள் தெரிவித்திருந்தனர். மாணவர் மும்தசிரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இந்நிலையில், கல்லூரி மாணவர் படுகொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,  இச்சம்பவம் தொடர்பாக ஆறு நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் செந்தில்குமார் உறுதிபட கூறியுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close