தேர்வுகளின் போது, அதிவிரைவு இணையதள வசதி உள்ளதா? என உறுதி செய்ய வேண்டும்: தேர்வாளர்கள் கோரிக்கை

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 12:53 pm
make-sure-is-there-a-high-speed-internet-facility-during-government-examinations

மத்திய, மாநில அரசின் தேர்வுகள் நடத்தும் போது, தேர்வுக்கு உட்படுத்தப்படும் கல்லூரிகளில் அதிவிரைவு இணையதள வசதி உள்ளதா என உறுதி செய்யப்பட்ட பின்பு கல்லூரிகளை தேர்வு செய்யும் படி தேர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் நேற்று, ரயில்வே பாதுகாப்புப்படை உதவி ஆய்வாளருக்கான தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு பிறகு செய்தியாளர்கள் தேர்வு குறித்த கேள்வி எழுப்பிய போது, கல்லூரி நிர்வாகம் முறையான இணையதள வசதியை செய்து தரவில்லை என தேர்வாளர்கள் தெரிவித்தனர். 

இதனால், ஆத்திரமடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் தேர்வாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கடுமையாக பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close