நெல்லை: விவசாய மற்றும் கால்நடை கண்காட்சி..!

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 01:12 pm
nellai-agriculture-and-animal-exhibition

நெல்லையில் நடைபெற்று வரும் விவசாய மற்றும் கால்நடை கண்காட்சியினை ஏராளமான விவசாயிகள் கண்டு பயனடைந்து வருகின்றனர். 

லைப் ஸ்டைல் டிரேட்ஸ் நிறுவனம் சார்பில் நெல்லையில் விவசாய மற்றும் கால்நடை கண்காட்சி தொடங்கியுள்ளது. இதில் 60 அரங்குகள் அமைக்கப்பட்டு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொழில் சார்ந்த கருவிகள், நாட்டு விதைகள், கால்நடை தீவனங்கள், மாடி தோட்டம் உள்ளிட்ட பலவற்றை காட்சிபடுத்தியுள்ளனர்.

மேலும், விவசாயத்திற்கு தேவையான விதைகள், உரங்கள், விவசாய கருவிகள் உள்ளிட்டவை எங்கு கிடைக்கும் என்பது குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இந்த கண்காட்சியை ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு,  தேவையான நிறுவனங்களின் முகவரிகளை பெற்று சென்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close