ஆத்திரத்தில் தூக்கி வீசப்பட்ட குழந்தை பலி: தாய் மாமன் கைது

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 03:47 pm
baby-death-police-arrested-her-uncle

முசிறி அருகே சொத்து தகராறு குறித்த வாக்குவாதத்தின் போது, ஆத்திரத்தில்  தூக்கி கீழே வீசப்பட்ட 15 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.  

திருச்சி மாவட்டம்  ஆமூர் கிராமத்தை சேர்ந்த முருகையா, சுபாஷினி தம்பதியினருக்கு ஒன்றேகால் வயதான இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர். கடந்த 2 ம் தேதி சுபாசினி முசிறியில் உள்ள தனது தந்தை சாமிநாதன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது குடிபோதையில்  வந்த சுபாஷினியின் அண்ணன் லோகநாதன், சொத்து தொடர்பாக சுபாஷினியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  

அப்போது, லோகநாதன் ஆத்திரத்தில் அங்கே விளையாடி கொண்டிருந்த குழந்தை சாதனாவை தூக்கி தரையில் வீசியுள்ளார். இதில் படுகாயமடைந்த குழந்தை சாதனா முசிறி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  தொடர்ந்து  மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சாதனா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சுபாஷினி அளித்த புகாரின் பேரில் லோகநாதனை கைது செய்த முசிறி போலீசார் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close