கோவை : ரேக்ளா பந்தயத்தில் சீறி பாய்ந்த காளைகள்..!

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 03:15 pm
coimbatore-bulls-racked-in-rack-law-racing

கோவையில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் ஏராளமான வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 

கோவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில், கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 4 ம் தேதி முதல் நடைபெற்று வரும் இவ்விழாவின் ஒரு பகுதியாக, நீலம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் வேளாண் திருவிழாவில் இன்றைய தினம் ரேக்ளா போட்டிகள் நடத்தப்பட்டன. 

100 மீட்டர், 200 மீட்டர் என தனித்தனியாக நடைபெற்ற இப்போட்டியில் ஏராளமான ரேக்ளா வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு காளைகள் சீறிப்பாய்ந்ததை கண்டு களித்தனர். இந்த போட்டிகளில் வெற்றிபெற் ரேக்ளா காளைகளுக்கு ஒரு பவுண்  தங்க நாணயம் உட்பட பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டன. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close